காவல்துறையில் இருக்கும் குறைகள் சரிசெய்யப்படும் – தென்மண்டல ஐஜி முருகன் பேட்டி

0
111
ig murugan

தூத்துக்குடி

தென் மண்டல காவல் துறையின் தலைவராக முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை டிஐஜி பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் ’’சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. லாக்கப் மரணம் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. காவலர்களுக்கு போதுமான அளவு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி ஒன்றே மனிதர்களை மிகச்சிறந்தவர்களாக்கும் வழிகளாகும்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது. சாத்தான்குளம் வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தென் மண்டலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையில் இருக்கும் குறைகளை சரி செய்யப்படும். சாத்தான்குளம் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக காவல்துறை மக்களுக்கு நண்பனாகவே செயல்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here