சாத்தான்குளம் கல்லூரி கொரோனா வார்டில் தீ விபத்து பொருட்கள் நாசம் – தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள் கைவரிசையா என விசாரணை

0
79
sathai news

சாத்தான்குளம், ஜூலை 2:

சாத்தான்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு கல்லூரி கரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

சாத்தான்குளம்-இட்டமொழி சாலையில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது கரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சாத்தான்குளம் பகுதிக்கு வருபவர்களுக்கு கரோனா வார்டில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர். பின்னர் பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என முடிவு வந்தால் அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே பரிசோதனை முடிவு தாமதம் மற்றும் தொற்று இல்லையென முடிவு வந்தாலும் தனிமை முகாமில் உள்ளவர்களை டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம் செய்வதாக புகைச்சல் இருந்து வந்தது. இந்நிலையில் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் திடீர் தீபற்றி எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் கல்லூரியில் இருந்த 4 பீரோக்கள் மற்றும் அலமாறிகளில் மாணவிகளுக்கு வழங்க வைத்திருந்த புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சின்னத்தாய், சாத்தான்குளம் காவல் நிலையத்தி்ல புகார் செய்தார். இந்த சம்பவத்தில் அங்கு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு இதில் தொடர்பு எதுவும் உண்டா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here