பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஸ்ரீவையி ல் அனைத்து தொழிற்சங்கத்தினர், சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

0
57
srivaikundam

ஸ்ரீவைகுண்டம், ஜூலை.3:

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மீது போடப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்து அவற்றின் விலையை குறைக்கவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்ககூடாது, கொரோனா காலத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, எல்.பி.எப். தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு மத்திய சங்க துணைத்தலைவர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். எல்.பி.எப். செயலாளர் சண்முகசுந்தரம், சி.ஐ.டி.யு. சம்மேளனக்குழு உறுப்பினர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கோரிக்கைள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதில், சங்க நிர்வாகிகள் ஆத்மராவ், சரவணன், ஆனந்தகந்தன் மற்றும் உறுப்பினர்கள் அரசின் அறிவுறுத்தல்படி முககவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் கலந்துகொண்டனர். முடிவில், ஐ.என்.டி.யு.சி செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தினைத்தொடர்ந்து, பணிமனை மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், பணிமனை மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தொழிற்சங்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு சார்பில் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு மாவட்ட குழு ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மத்திய சங்க துணை செயலாளர் குமரகுருபரன், சம்மேளனக்குழு உறுப்பினர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் மாடத்தி, முருகன், முனீஸ்வரன், ஆறுமுகம், உலகநாதன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here