தூத்துக்குடியில் நீர்வழி பாதைகள், கால்வாய்களை துய்மைப்படுத்தும் பணியில் ஸ்டெர்லைட்

0
35
sterlite

தூத்துக்குடி,நவ.15. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பயணளிக்கும் விதமாக மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளை சுத்தப்படுத்துவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பங்களிப்பாக வழங்கியிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மாவட்ட முக்கிய நீர்ஆதாரங்களை பாதுகாப்பதும், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் பிற நீர்வழிப்பாதைகளை பராமரிப்பதும் விவசாயிகள் உட்பட, பொதுமக்களின் பல்வேறு நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சாமிநத்தம், ராஜாவின் கோயில், நடுவக்குறிச்சி, சுந்தரலிங்கன் காலனி மற்றும் நைனார்புரம் ஆகிய கிராமங்களிலுள்ள கால்வாய்களையும், குளங்களையும் சுத்தம் செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உதவ ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முன்வந்துள்ளது. இக்கிராம மக்கள் கோரிக்கைகள் அடிப்படையில் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. சாமிநத்தம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. எஸ். முருகன் துவக்க நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேற்கூறப்பட்ட கிராமங்களில் 2000-க்கும் அதிகமான குடும்பங்கள் இப்போது பலனடைகின்றன. இந்த நீர் ஆதாரங்களில் சேமிக்கப்படுகின்ற நீரானது, பாசனம் மற்றும் பிற வீட்டுத் தேவைகளுக்காக கிராமத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய், பருத்தி மற்றும் பிற தானியங்கள் போன்ற வேளாண் சாகுபடிக்காகவும் இத்தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறப்பட்ட கிராமங்களில் 8 ஏக்கருக்கும் அதிகமான நீர்ஆதாரத்திற்கான நிலப்பரப்பு சுத்தமற்ற, தேங்கிய நீரால் நிரம்பியிருந்தது. கடும் மழை மற்றும் பருவமழை காலங்களின்போது, அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேறுகின்ற மிகையான, சுத்தமற்ற நீர் இதில் வந்துசேரும். தேங்குகின்ற அழுக்குநீரின் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கிருமிகள் பல்கிப் பெருகுவதற்கான ஆதாரமாக இது இருந்தது.வீடுகளில் பயன்படுத்துவதற்கான உகந்த நீரை பெருகுவதற்கான அணுகுவசதியும் இந்த கிராம மக்களுக்கு இருக்கவில்லை.

நீரில்லாத பிற நேரங்களில் இந்த இடமானது, புல் பூண்டுகள், பயனற்ற செடிகள், புதர்கள் மண்டியதாக காணப்பட்டது. இந்த பகுதி தற்போது கால்வாய்கள் மற்றும் குளங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது 7 அடிக்கும் அதிகமான உயரம் வரை நீரை சேமித்து வைக்கும் வசதியை இது பெற்றிருக்கிறது.

சாமிநத்தம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. எஸ். முருகன் கூறுகையில்: , “முன்பெல்லாம், சுமார் 4 முதல் 5 கி.மீட்டர் வரையிலான நிலமானது, உலர்ந்த புல் மற்றும் புதர்களால் மண்டிக்கிடக்கும். குறுகலான இப்பாதையில் தண்ணீர் தேங்கியிருப்பது எங்களது தினசரி வாழ்க்கை செயல்பாடுகளை பெரிதும் பாதித்து வருகிறது. இந்த நீர்வழிப்பாதையை தூய்மைப்படுத்தியதற்குப் பிறகு, பல்வேறு வீட்டு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கிற இந்த நீரை அதிக மக்கள் பயன்படுத்த வெகு ஆர்வத்தோடு முன்வருகின்றனர்.

இத்திட்டத்தின் வெற்றியின் காரணமாக, இதுபோன்ற வேறுபிற திட்டங்களுக்கு ஆதரவளிக்க பல நிறுவனங்கள் இப்போது முன்வந்திருக்கின்றன. எங்களது அடுத்த செயல்திட்டமாக, குளிப்பதற்கான நீர்த்தொட்டிகளை கட்டுகின்ற பணியை தொடங்க நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்,” என்று கூறினார்.

சாமிநத்தம் திருமதி. கற்பகம் கூறுகையில்: “முன்பெல்லாம் இந்த இடத்தில் நீர் தொடர்ந்து நிற்காது. குறுகலான வழிகள், நீரால் வேகமாக நிறைந்துவிடும். எனினும், இப்போது கால்வாய்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தியிருப்பதால் நீரானது, தடங்களின்றி பாய்ந்தோடி வருகிறது மற்றும் சரியான வழிமுறையில் அது சேமித்து வைக்கப்படுகிறது,” என்று கூறினார்.

வரவிருக்கும் நாட்களில் மாவட்டத்தில் இன்னும் அதிக கிராமங்களில் இதை விரிவுபடுத்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சமூக நலனுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொண்டு வந்துள்ளது. கல்வி, சுகாதாரம், தூய்மையான குடிநீர், மரக்கன்று நடுதல், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரம் பெறச் செய்தல் ஆகியவற்றின்கீழ் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here