சிவகளை இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளிகள் சில மணிநேரத்தில் கைது – தனிப்படையினரை எஸ்.பி பாராட்டினார் !

0
185
s.p thoothukudi

ஸ்ரீவைகுண்டம், ஜூலை.3:

சிவகளை இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளிகள் சில மணிநேரத்தில் கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., பாராட்டினார்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. இவர் ஏரல் முதலியார் தெருவை சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் ராஜா தனது மனைவி சங்கீதாவிடம் சுமார் 40பவுன் நகை வரதட்சணையாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனைதடுக்க வந்த விக்னேஷ்ராஜாவின் தாயார் முத்துப்பேச்சி, தந்தை லட்சுமணன், நண்பர் அருண் மகேஷ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், முத்துப்பேச்சி, அருண் மகேஷ் ஆகியோர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவுப்படி திருச்செந்தூர் டி.எஸ்.பி., பாரத் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப்ஜெட்சன்(ஸ்ரீவைகுண்டம்), ஜீன்குமார் (ஆழ்வார்திருநகரி) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இரவோடு இரவாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலையாளிகள் மூவரையும் கைது செய்தனர். இதனையறிந்த எஸ்.பி., ஜெயக்குமார் தனிப்படை போலீசாரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு இன்று மாலை நேரில் வந்து வெகுமதி வழங்கி பாராட்டி கவுரவித்தார்.

அப்போது எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது, ’’இந்த கொலை வழக்கில் விரைந்து சில மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், வணிகர்களோடு நல்லுறவு கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here