தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி இரத்த தானம் வழங்கினார் – உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு !

0
33
tuty s.p news
 இன்று உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்  இரத்த தானம் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார். 

 இன்று (21.06.2019) உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையினர் இரத்த தானம் வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை, ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுமார்  உட்பட 

தூத்துக்குடி ஆயுதப்படையினர், பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணியின் யு மற்றும் டீ நிறுமம், 12 ஆம் அணியின் கு நிறுமம் மற்றும் தூத்துக்குடி  நகரம் மற்றும் ஊரக காவல்துறையினர் சுமார் 500 பேர் இன்று இரத்த தானம் வழங்குகின்றனர். 

ஆகவே இந்த இரத்த தான முகாமில் தலா ஒரு நபருக்கு 1 யூனிட் (350 மில்லி) வீதம்  500 யூனிட் இரத்தம் பெறப்படவுள்ளது. 

இந்த முகாமிற்கு தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி   அரசு மருத்துவமனைகளிலிருந்து முறையே டாக்டர் சாந்தி, டாக்டர் சண்முகநாதன் மற்றும் டாக்டர் தேவ சேனா ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இரத்தப்பரிசோதனை செய்து, காவல்துறையினரிடமிருந்து இரத்தம் எடுத்தனர். 

இரத்த தானம் வழங்கியவர்களுக்கும் இரத்தம் எடுப்பதற்கு உதவிய மருத்துவக் குழுவினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here