சாத்தான்குளம், ஜூலை 5:
சாத்தான்குளம் அருகே சலவைத் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.
சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55), சலவை தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 5 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள்அனைவரும் வீட்டில் இருந்தபோது ராஜகோபால் வீட்டில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றில் தீ மளமளவென பரவியதால் சாத்தான்குளம் தீயைணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் துணிமணிகள்,பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் தீயில் எரிந்து சாம்பலானது. . இதன் மதிப்பு ரூ 80 ஆயிரம் ஆகும்.
மின்கசிவில் தீ பற்றியதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.