சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினரிடம் இன்று சிபிசிஐடியினர் விசாரணை

0
399
cbcid

தூத்துக்குடி சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து சிபிசிஐடியினர் விசாரித்து வருகிறார்கள். சம்மந்தப்பட்ட நபர்களிடமும் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில் இறந்துபோன ஜெயராஜ் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்கிறது சிபிசிஐடி. இன்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கரிடம் செய்தியாளர்கள் பேசினர். அதற்கு அவர், ‘’சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் குறித்த வழக்கில் பல்வேறு கோணங்களில் பல்வேறு நபர்களிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று போலீஸ் நண்பர்கள் குழுவிடம் விசாரணி மேற்கொள்ளப்பட்டது. இன்றும் அவர்களிடம் விசாரனை நடக்க இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடிஎடுக்க இன்னும் ஒரு வாரத்தில் மனு செய்வோம்’’ என்றார் ஐஜி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here