சாத்தான்குளம், ஜூலை 6:
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய, வேளாண்மை அலுவலர்களுக்கு கரோனா தொற்று நோய் தடுப்பு மாத்திரை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் பூச்சிக்காடு கணபதி நகர் ஹோமியோபதி மருத்துவர் ஜி. சுந்தரேசகுமரன் கரோனா தடுப்பு மருந்து ஏஆர்எஸ் ஏஎல்பி 30 எனும் மருந்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்.
இதையொட்டி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும்,24 கிராம ஊராட்சி செயலர்களுக்கும், மற்றும் சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் ஹோமியோபதி மருத்துவர் சுந்தரேசகுமரன் சார்பில் இலவசமாக இடைச்சிவிளை சீனிவாசகம் வழங்கினார்.