சாயர்புரம் கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை – மது குடித்ததை தாய் தட்டிகேட்டதால் பரிதாபம்

0
87
sawerpuram

சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்தில் மது அருந்தியதற்கு தாய் திட்டியதால் கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்மணி. இவரது மனைவி எஸ்தர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரிச்சிஸ் (20) சாயர்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுந்தர்மணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் ரிச்சிஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் தாய் எஸ்தரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிச்சிஸ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது தாயார் எஸ்தர் மது அருந்தினால் வீட்டிற்குள் வராதே என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரிச்சிஸ் தங்கம்மாள்புரத்தில் உள்ள அவரது தந்தையின் கல்லறைக்கு அருகில் சென்று தனது பைக்கில் உள்ள பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீயின் வெப்பம் தாங்காமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு ஒடி வந்தவர்கள் தீயை அணைத்தனர். உயிரை காப்பாற்ற தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிச்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here