சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு மனு

0
72
inspector sridar

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை மரணத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பெயில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இது தொடர்பான மனு விசாரணை காணொலி மூலம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த ஜாமீன் மனுவானது, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

அரசு தரப்பில் குற்றவியல் துறை துணை இயக்குனர் சுப்புராஜ் காணொலி காட்சி மூலம் ஆஜராகி ஜாமீன் மனு மீது விசாரணை செய்கிறார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here