கொங்கராயகுறிச்சியில் மழைவேண்டி சிறப்பு தொழுகை !

0
26
tholugai news

கொங்கராயகுறிச்சியில் மழைவேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த காலங்களை காட்டிலும் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடுமையான வறட்சியால் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் நித்தம் நித்தம் பரிதவித்து வரும் நிலையில், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைககளை எடுத்தும் வருகிறது. இந்நிலையில், அதிமுக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தவரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக்கிளைகளிலும் சிறப்புத்தொழுகை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயகுறிச்சி கிளை சார்பில், மாவட்ட செயலாளர் அஸார் தலைமையில் கொங்கராயகுறிச்சி மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸ் வளாகத்தில் மழைவேண்டி சிறப்புத்தொழுகை நடைபெற்றது.

இதில், கொங்கராயகுறிச்சி கிளைத்தலைவர் ருசிஇஸ்மாயில், கிளை செயலாளர் கலீல், பொருளாளர் மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மழைவேண்டி நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் பெண்களும் அதிகளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here