அத்திமரப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

0
416
athimarapatti news

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ளது அத்திமரப்பட்டி. இங்கு அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கூடம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது. இந்த பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நேற்று இரவு இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள கதவுகளின் பூட்டுகளை உடைத்து, மர்ம ஆசாமிகள் அங்கிருந்த கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, வருகை பதிவிடும் இயந்திரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியைகள், கதவு திறந்து கிடப்பது கண்டும், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெ.ஜெயலலிதா முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறைய அரசு பள்ளிகள், ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பதால், அப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here