தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

0
66
corona news

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

தூத்துக்குடி, ஆரோக்கிய புரத்தை சேர்ந்த 50 வயது பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய பாதுகாப்பு விதிகளின் படி அடக்கம் செய்யப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தில் சேர்ந்த 58 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் இன்று ஒரேநாளில் மட்டும் 2 பேர் இறந்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here