கோஹ்லி, கேதர் ஜாதவ் அரைசதம் * இந்தியா 224/8 ரன்கள்

0
29

உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன்கள் மட்டும் எடுத்தது. 

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். பயிற்சியில் பும்ரா பந்து வீச்சின் போது பெருவிரலில் காயம் அடைந்த விஜய் சங்கர் அணியில் இடம் பெற்றார். 
ரோகித் சர்மா (1), லோகேஷ் ராகுல் (30) நிலைக்கவில்லை. விஜய் சங்கர் 29 ரன் எடுக்க, கேப்டன் கோஹ்லி 67 ரன் எடுத்தார். தோனி 28, பாண்ட்யா 7 ரன் எடுத்து அவுட்டாகினர். 

கேதர் ஜாதவ், தனது 6வது அரைசதம் எட்டினார். கடைசி ஓவரில் முகமது ஷமி (1), கேதர் ஜாதவ் (52) அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன்கள் மட்டும் எடுத்தது. பும்ரா (1), குல்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here