தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள் விழா – அமமுக ஏற்பாடு

0
62
ammk

தூத்துக்குடி, ஜூலை.11:

தூத்துக்குடி மாவட்ட அமமுக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, 3வது வட்ட செயலாளர் திரைப்பட நடிகர் காசிலிங்கம் தலைமை வகித்தார்.

விழாவில், மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துகோன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமரன், மாவட்ட வர்த்தக அணி பாக்கியசெல்வன், கலை இலக்கிய அணி வீரபுத்திரன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சண்முககுமாரி, நிர்வாகிகள் ஜேனியல், கிருஷ்ணசாமி, பகுதி செயலாளர்கள் அருள்செல்வம், பாண்டி, பால்பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை 3வது வட்ட செயலாளர் திரைப்பட நடிகர் காசிலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here