சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை – வீடியோ பதிவு செய்தனர்

0
72
sathankulam

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் சம்மந்தமான சி.பி.ஐயின் விசாரணை இன்றும் நடந்தது. நெல்லை விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள், ஊரடங்கு நேரத்திலும் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஏடிஎஸ்பி விஜயகுமார்சுக்லா தலைமையிலான அதிகாரிகள், மாலை 5.15 மணி அளவில் சாத்தான் குளம் காவல்நிலையத்திற்கு சென்றனர். இரவு 7.40 வரை அங்கு விசாரணையில் ஈடுபட்டனர்.

அனைத்தையும் செல்போன்களால் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்ட அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸின் கடை இருக்கும் பகுதிக்கு சென்றனர். இன்று ஊரடங்கு இருந்ததால் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. அதனால் காரை நிறுத்தி பார்த்தவர்கள், காரைவிட்டு இறங்காமல் அங்கிருந்து கிளம்பினர்.

சாத்தான்குளம் நீதி மன்ற வாளாகத்திற்கு சென்ற அவர்கள், அங்கு நின்று சிறிது விசாரித்துவிட்டு கிளம்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here