தமிழகத்தை சேர்ந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம் கிட்னி பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். அவருடைய நிலையை கருத்தில் கொண்டு நடிகர் கமலஹாசன், பொன்னம்பலம் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
அதேபோல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் பொன்னம்பலம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்தி தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவும் வகையில் தமிழக பா.ஜ.க ரூ.2 லட்சம் வழங்கியிருக்கிறது.
இன்று தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன், மாநில செயலாளர் சுமதிவெங்கடேஷ் மற்றும் கலாச்சாரபிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் ஆகியோர் பொன்னம்பலம் வீட்டிற்கு சென்றனர். அவரிடம் நலம்விசாரித்தவர்கள், ரூ.2 லட்சம் தொகையை வழங்கினர்.