சாத்தான்குளம், ஜூலை 12:
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் அழகுமுத்து கோனின் 263வது குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊர் பொதுமக்கள் அவரது உருவபடத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் ஊர் பொதுமக்கள், சுற்றுவட்டார இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னார்டு சேவியர், வீரன் அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்த அறிவுரையும், விழாவில் கலந்து கொண்டவருக்கு இனிப்பு மற்றும் முகக்கவசம் வழங்கினார்.