கிராமங்களில் தங்கி குறைகேட்கிறார் குமாரசாமி

0
28

கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராமங்களுக்கு சென்று தங்கி மக்களிடம் குறைகளை கேட்கும் யாத்திரையை தொடங்கி உள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்கு அவர் ‘கிராம வஸ்தவா’ என்று பெயரிட்டுள்ளார். இத்திட்டத்தின் படி, யாத்திர் மாவட்டத்தில் உள்ள குர்மிட்கல் கிராமத்துக்கு சென்று அவர் தங்கினார். அங்குள்ள மக்களிடம் குறைகளைக்கேட்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமத்துக்கு சாதாரண பஸ்சில்தான் வந்ததாகவும், சொகுசு பேருந்தில் வரவில்லை என்றார். களப்பணிதான் முக்கியம் என்ற அவர், அதற்காகவே கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து வருவதாக கூறினார்.

எதிர்க்கட்சியினர்தான் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவதாக அவர் புகார் கூறினார். ஆனால் குமாரசாமி கிராமங்களுக்கு சென்று தங்கும் நிகழ்ச்சியின் போது, சொகுசு வசதிகள் தயார் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இரவில் தர்ணா பந்தலில் துாங்கி போராட்டங்களை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here