”வாரம் தோறும் பாராட்டு – வாரி வழங்குகிறார் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்”

0
218
thoothukudi s.p

கொரோனா, சாத்தான்குளம் விவாகரம் என அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்மவங்களினால் மன அழுத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்த்துறையினர். அவர்களை தேற்றுகிற வகையில் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார். சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினரை வாரம் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வெகுமதி வழங்கி, பாராட்டுகிறார் எஸ்.பி. அவ்வாறு கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார் அவர்.

விளாத்திக்குளம் ஆற்றங்கரை சொக்கலிங்கபுரம், நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் முத்துப்பாண்டி (32). இவருக்கும் தெற்கு திட்டங்குளம், மேற்கு காலணியைச் சேர்ந்த பசுபதிபாண்டியன் (வயது 19) என்பவருக்கும் இடையே கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்ததில் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து முத்துப்பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 07.07.2020 அதிகாலை டாட்டா ஏஸ் லோடு வாகனத்தை (TN 69 K 3584) வேண்டுமென்றே இரு சக்கர வாகனத்தில் வந்த முத்துப்பாண்டி மீது ஏற்றி கொலை செய்தனர். அதன்பிறகு சம்பவ இடத்தை விபத்து ஏற்பட்டது போல் சித்தரித்து நாடகமாடினார்.

இது சம்மந்தமாக கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து, காவலர்கள் மோகன், . சுடலை மணி, ஆனந்த ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். அதில் விபத்து அல்ல, கொலை என்பது தெரியவந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட 3 பேர்களை சம்பவம் நடந்த 14 மணி நேரத்தில் விரைந்து கைது செய்தனர்.

அதே போன்று கடந்த 11.07.2020 அன்று செய்துங்கநல்லூர், சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் செல்வின் மகன் டேனியல் ஜெரோன் (17) என்பவரை திருநெல்வேலி சிவந்திப்பட்டியைச் சேர்ந்த கிருபை மணி மகன் ராஜா கிளமெண்ட அரிவாளால் தாக்கியுள்ளார். இது சம்மந்தமாக செய்துங்கநல்லூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் செல்வி அருள் ரோஸ் சிங், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜேக்கப் தங்கமோகன், நாராயணசாமி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர்கள் ஆனந்தராஜ், பாலாசிங் ஆகியோர் அடங்கிய காவல் படையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 8 மணி நேரத்தில் சம்மந்தபட்டவர்களை விரைந்து கைது செய்தனர்.

கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து, செய்துங்கநல்லூர் காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் செல்வி. அருள் ரோஸ் சிங் உட்பட 10 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here