தூத்துக்குடி ஆவுடையார்புரத்தை சேர்ந்த பாத்திமா பீவி என்பவர் கடந்த 9-ம் தேதி ஜாகீர் உசேன் நகருக்கு சென்றார். அப்போது தான் வைத்திருந்த ரூ.12,500-யுடன் கூடிய மணி பர்ஸை தவறவிட்டுவிட்டார். அந்த வழியாக வந்த கனகராஜ் என்பவர் அந்த மணிபர்ஸை எடுத்து தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
மணிபர்ஸ் காணாமல் போனது குறித்து புகார் செய்ய, பாத்திமா பீவி தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு சென்றார். அப்போது கனகாராஜ் ஆல் மணிபர்ஸ் அங்கே ஒப்படைக்கபட்டிருந்தது தெரிய வந்தது. கனகராஜின் நேர்மையை அனைவரும் பாரட்டினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார், அவரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். உரியவரிடம் மணிபர்ஸ் வழங்கப்பட்டது.