”காவல்துறையின் சட்டவிரோதபோக்கை ஐநா சபையே கண்டனம் தெரிவித்துள்ளது” – சாத்தான்குளத்தில் எம்.பி சுப்புராயன்

0
57
sathai news

சாத்தான்குளம்-ஜூலை13

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினர் அழைத்து சென்ற நிலையில் மரணமடைந்தனர். சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில்தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

\இந்தநிலையில் ஜெயராஜ் குடும்பத்தினரை பல்வேறுஅரசியல் கட்சிதலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர். மாநில இந்தியகம்யூனிஸ்ட் கட்சிதுணைசெயலாளரும்,திருப்பூர் நாடாளுமன்றதொகுதிஉறுப்பினர் சுப்புராயன்,பெருந்துறைதொகுதிமுன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமிஆகியோர் கட்சியினருடன் சாத்தான்குளம் சென்று பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மனைவி செல்வராணிக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் எம்.பிசுப்புராயன் செய்தியாளர்களிடம் பேசினார், ‘’தமிழகத்தில் இது வரை இப்படிஒருபாதக செயல் நடக்காதநிலையில் சாத்தான்குளத்தில் நடந்துள்ளது. இது வெட்ககேடானது. சட்டத்தின் ஆட்சியைநிலை நிறுத்திடகாவல்துறைபாடுபடவேண்டும். ஆனால் காவல்துறையினரே சட்டவிரோதமாகசெயல்பட்டுதந்தைமகன் ஆகிய இரண்டுபேரையும் உயிர்பலி எடுத்துள்ளனர்.

காவல்துறையினரில் காட்டுமிராண்டிதனத்தைஉலக ஐனாசபையே கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவும்,தமிழகமும் தலைகுனியவேண்டியதுதான். இந்தசம்பவத்தில் நடந்தவிவரங்களைதுணிச்சலோடுதெரிவித்தபெண் காவலர் ரேவதியின் தைரியத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபாராட்டுகிறது. இதனால் இவரின் உயிருக்கு ஆபத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேபெண் காவலர் ரேவதிக்குஅரசு உயிர் பாதுகாப்பு அளிப்பதோடுஉயர் பதவியும் அளிக்கவேண்டும்.

பெண் காவலர் ரேவதிக்குஉயிருக்குஆபத்துஏற்படுமேயானால் அதற்கு முழு பொறுப்பும் தமிழகமுதலமைச்சர் பழனிசாமியைசேரும். இதற்குமுதலமைச்சர் பழனிசாமிதான் பொறுப்பு. இதற்காகபோராட இந்தியகம்யூனிஸ்ட் கட்சிதயங்காது.

தற்பொழுது நடக்கும் சி.பி.ஐ விசாரணைஎப்படிபோகும் என்றுஅனுமானம் தெரியவில்லை. இதில் அரசியல் தலையீடு இருக்குமாஎன்றும் தெரியவில்லை. போகபோகதான் தெரியும்.குற்றவாளிகளைதப்பிக்க வழி செய்தால் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிவிழிப்புடன் கவனிக்கும். சட்டத்தின் சந்துபொந்துகளின் மூலமாககுற்றவாளிகள் தப்பிவிட கூடாதுதண்டிக்கப்படவேண்டும்.

இதைதொடர்ந்து இந்தியகம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்திவரும்’’ என்றார். அவருடன் மாவட்டசெயலாளர் அழகுமுத்துபாண்டியன்,மாநிலசெயலாளர் மணி ,மாவட்டபொதுசெயலாளர்; கிருஷ்ண ராஜ், ஒன்றியகட்டுமானதொழில் சங்கதலைவர் பலவேசம்,மாவட்டஏ.ஐ.டி.யு.சிசெயலாளர் ஆண்டி,சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,நகரசெயலாளர் ராஜகோபால் உட்படகட்சியினர் உடன் இருந்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here