’’அதிகாரியின் ஆட்டத்தை அடக்கவில்லையென்றால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும்ங்கோ’’

0
209
thoothukudi collector news

உப்பு காற்று வீசுகிற மாவட்டத்தில் ஜாலியாக பஞ்சாயத்து செய்து வருகிறார் அந்த அதிகாரி. இவர் நினைத்தால் யாரையும் கார் ஏற்றி கொலையும் செய்வாராம். எந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லையும் கொடுப்பாராம். சட்டம் இவருக்கு சல்யூட் அடிக்கிறதாம்.

கடந்த ஒருமாதத்தில் இவை இரண்டையும் செய்து விட்டு எந்தவித அச்சமின்றி ஜாலியா வலம் வருகிறாராம் அவர். தெற்கே ஒரு யூனியனில் குற்றம் சொன்னவுடன் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கபட்டதாம். ஆனால் இவர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் கிடையாதாம். புதிய கோட்டையில் ஒரு அப்பாவி பெண் மீது காரை ஏற்றி கொன்றார் என்கிறார்கள். அந்த வழக்கில் ஓட்டுநர் பழியேற்றுக் கொண்டாராம். இந்திய தண்டனை சட்டத்தில் FIR இவர் மீது போடப்பட்டு எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு.

சரி, அடுத்த பத்தாவது நாளில் உடன் பணிபுரியம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இந்த மாவட்டத்தில் பஞ்சாயத்து செய்து வரும் இவர், அந்த பெண் இவர் மீது புகார் கொடுத்து ஒருவாரம் கடந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம்.

ஏன் இவர் அவ்வளவு அதிகாரம் படைத்தவரா? என்று விசாரித்தால், ஆம் இவர் விளாத்தியாரின் நெருங்கிய உறவினர் மட்டுமல்ல, நடந்து முடிந்த உள்ளூர் தேர்தலில் இவரின் பங்கு ஏராளமாம். அதிக எண்ணிக்கையில் உறுப்பினரை பெற்ற எதிர் கட்சிக்கு இடம் கொடுக்காமல் அவர் விரும்பும் கட்சிக்காக நெஞ்சுவலியை விலைக்கு வாங்கியவர்.

தேர்தல் நேரத்தில் உதவியதற்காக இவர் செய்யும் எந்த ஆட்டத்தையும் கவனிக்க முடியாமல் ஆட்சித்துறை தவிக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here