இந்தியா-சீனா அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சு !

0
180
india - cina ladaku

இல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

காஷ்மீரின் லடாக் அருகே இந்தியா சீனா எல்லையில் சமீபத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில சீன வீரர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதட்டம் நிலவியது.

இதையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இராணுவத்தினரும் பின் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி எல்லையிலிருந்து 600 மீட்டர் தூரம் வரை இருதரப்பும் பின்வாங்கினார்.. இந்நிலையில் இரு நாட்டு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் ஆன இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதில் இருதரப்பும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து எவ்வளவு தூரம் பின்வாங்கிச் செல்வது பதட்டத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே எல்லையில் எப் 4 பகுதியிலிருந்து சீன ராணுவத்தினர் நேற்று பின் வாங்கி சென்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here