தூத்துக்குடியில் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு

0
112
police news

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்கள் பதவிக்கான பெண் விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு இன்று நடைபெற்றது.

இன்று (20.11.2019) 441 பெண் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து வீசுதல் அல்லது குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. இதில் 209 பெண் விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ரயில்வே ஐ.ஜி ஏ. வனிதா, சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி ஆசியம்மாள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 753 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 2641 விண்ணப்பதாரர்களுக்கு 06.11.2019 முதல் 08.11.2019 வரை முதற்கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. அதில் 441 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 1767 விண்ணப்பதாரகள் இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் 18.11.2019 அன்று கலந்து கொண்ட 688 ஆண் விண்ணப்பதாரர்களில் 535 பேரும், 19.11.2019 அன்று கலந்து கொண்ட 638 ஆண் விண்ணபதாரர்களில் 538 பேரும், மொத்தம் 1073 ஆண் விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மேற்படி 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வில் தகுதி பெற்ற 209 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நாளை (21.11.2019) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here