தூத்துக்குடி டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா !

0
264
cake

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா காலங்களில் தூத்துக்குடி டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசாவில் கேக் விற்பனை படுஜோராக நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.

இதற்காக கேக் மிக்சிங் விழா டி.எஸ்.எஃப் வளாகத்தில்ன் நடந்தது. டி.எஸ்.எஃப் குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் டி.பால்பாண்டி மற்றும் டி. துரைராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத் தலைவர் மற்றும் ஜீம்கான கிளப் தலைவருமான ஜோ பிரகாஷ் மற்றும் ஜீம்கான கிளப் செயலாளர் அருள்ராஜ் சாலமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

செயல் இயக்குனர்கள் டி.கிப்சன் மற்றும் எம்.திவ்யா பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கேக் தயாரிப்பது குறித்து அங்குள்ளவர்கள், ’கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரி பழங்கள், உலர்ந்த அத்திபழம், பாதம், முந்திரி,பருப்புகள், வால்நட், செர்ரி பழம், BLACK CURRANTS, APRICT, LEMON RINDS, CANDIT ORANGE, TUTY FRUTY மற்றும் பலதரப்பட்ட ஜாம் வகைகள், இத்துடன் உயர்தர மதுபானங்களையும் சேர்க்க வேண்டும். இதில் உள்ள இனிப்பு தன்மையானது கேக் கெடாமல் பாதுகாக்கிறது.

இறுதியாக உயர்தரமான மதுபானங்கள், பழரசங்கள், தேன் ஆகியவை நன்றாக உறுவதற்கு ஏதுவாக சேர்க்கப்படுகிறது. பின்னர் பழக்கலவையானது மிகப்பெரிய காற்று புகாத கொள்கலனில் வைத்து பாதுகாப்பாக மூடப்படுகிறது. பழக்கலவை ஊறுவதற்கு ஏதுவாக வாரம் ஒரு முறை திறக்கப்பட்டு நன்றாக கலக்கப்படுகிறது.

HOTEL DSF GRND PLAZA ல் டிசம்பர் 16 ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கேக் விற்பனைக்கு தயாராகிறது. 1/4 கிலோ, 1/2 கிலோ, 1 கிலோ மற்றும் சிறிய SLICE அளவில் கிடைக்கும்’ என்று விளக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here