நாசரேத்தில் ஜம்போ பேக்கரி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல் ! ஆய்வாளர் சகாயசாந்தி துவக்கி வைத்தார்!!

0
241
nazareth news

நாசரேத், ஜூலை.15: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஜம்போ பேக்கரி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாசரேத் காவல் ஆய்வாளர் சகாயசாந்தி கபசுரகுடிநீர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம்,நாச ரேத்தில் புதிதாக திறக்கப் பட்டுள்ள ஜம்போ பேக்கரி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு காலை முதல் மாலை வரை நடைபெற்றது. ஏராளமானோர் பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பேக்கரி உரிமையாளர் சித்ராங்கன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை பிச்சிவிளை சுதாகர் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here