ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தலைவருமான பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன்படி, ஸ்ரீவைகுண்டம் நகர சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நளராஜபுரம் காமராஜர் நாடார் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரைப்பட நடிகர் சரத்குமார் ஆகியோர் பிறந்தநாள் விழா நளராஜபுரத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, காமராஜர் நாடார் நற்பணி மன்ற தலைவர் சக்திவேல்முருகன் தலைமை வகித்தார். ஊர் தலைவர்கள் கருப்பசாமி, லட்சுமணன், சமக இளைஞர் அணி தனுஷ்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவினை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு ஸ்ரீவைகுண்டம் நகர சமக செயலாளர் சரத்பாலன், காமராஜர் நாடார் நற்பணி மன்ற துணைத்தலைவர் சுரேஷ்பாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து தற்போதுள்ள காலச்சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.
இதில், சமக இளைஞர் அணி லெட்சுமணன், கிளை செயலாளர் லூக்கா பாக்யராஜ், விவசாய அணி பெரியசாமி, இசக்கிமுத்து, பொன்ராஜ், மாடசாமி, சதீஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். காமராஜர் பிறந்தநாள் விழாவில், இனிப்புகளோடு சேர்த்து தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக