தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269 ஆகும். அதேவேளையில் இன்று குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 39 ஆகும்.
ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தபட்டு வைத்திருந்த கொரோனா தாக்கம் தற்போது இல்லை. வெளியிடங்களிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
பொதுப்போக்குவரத்து இல்லை என்பது ஆறுதலான விசயமாகும். தற்போது டீ கடை, சலூன் கடைகள் மூலம் தொற்றும் ஏற்படும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதை அதிகாரிகள் அக்கறை எடுத்து கண்காணித்து வருகிறார்கள். எனினும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.
அந்த வகையில் இன்று ஒரு நாள் மட்டும் 269 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 402 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.