2021 தேர்தலிலும் அதிமுக ஆட்சியே மலரும் என்கிற அதிசயத்தை ரஜினி சொல்லியிருப்பார் – தூத்துக்குடியில் முதல்வர் பேட்டி !

0
95
cm news

புதிய மாவட்டமாக தென்காசி அறிமுக விழா நாளை தென்காசியில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். இதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் கூறும்போது,

33 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி புதிய மாவட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. 2021 ல் ரஜினி எந்த அடிப்படையில் அதிசியம் நிகழும் என கூறினார் என தெரியவில்லை.2021லும் அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை கட்சி ஆரம்பித்தவுடன் அவர் குறித்த கருத்தை கூறுகிறேன். பாராளுமன்ற தேர்தலோடு பாஜகவுடன் அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது. 2021ல் நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று அதிமுகவை சேர்ந்த ஒருவரே முதல்வராக வருவார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணியும் மகத்தான வெற்றி பெறும். மறைமுக தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்தியது திமுக தான்.ஆனால் அதனை ஸ்டாலின் எதிர்பது விந்தையாக உள்ளது.31-6-2006 ல் சட்டமன்றத்தில் ஏன் மறைமுக தேர்தல் வேண்டும் என் விளக்கமாக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

அசாம்,குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுக தேர்தல் உள்ளாட்சியில் நடக்கிறது.விழுப்புரம் உள்ளிட்ட 2 நகராட்சிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால் தான் மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும் மெஜராட்டி கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது. உள்ளாட்சிகளை நடத்துவது கடினமாக இருக்கும்.

96 வரை உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் தான் இருந்தது.நேரடி தேர்தலை கொண்டுவந்ததும் திமுகதான். அதனைதொடர்ந்து மறைமுக தேர்தலை கொண்டுவந்ததும் திமுக தான். ஊராட்சி ஒன்றியங்கள் மாவட்ட ஊராட்சிகளில் நடத்தபடும் மறைமுக தேர்தலை போல மாநகராட்சி,நகராட்சிகளும் தேர்தல் நடத்தப்படும். மறைமுக தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி நாங்கள் சொன்னால் தவறா?.

மறைமுக தேர்தலுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். காலகட்டத்திற்கு ஏற்றார்போல முடிவு எடுக்கவேண்டியுள்ளது.தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுக தேர்தல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் பயன் பெறும் வகையில் ரேசன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டு.அதற்கு ஏற்றார் போல கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் இருப்பு உள்ளது. மாநிலம் முழுதும் குடிமரமாத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்தாண்டு நல்ல மழைபொலிவும் பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது. தன்னாட்சி அமைப்பான தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ₹2000 வழங்குவதற்கு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்தவுடன் ₹2000 வழங்கப்படும். தமிழக அரசால் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கும் திட்டத்தை உயர்த்தி வழங்குவதற்க்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை.மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here