எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி நீதி மன்றம்

0
179
si balakrishnan

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். எஸ்.ஐ பால்துரையின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்கிறது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் ஏற்கனவே ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சார்பில் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. பாலகிருஷ்ணன் சார்பான ஜாமீன் மனுவை நீதிபதி லோகேசுவரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் பால்துரையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகாததால், வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here