திருச்செந்தூரில் பா.ஜ.க.,வினர் வீடுகளில் முன்பு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடி வழிப்பட்டனர்

0
52
bjp

திருச்செந்தூர், ஜூலை 16

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் கறுப்பர் கூட்டம் வலைதள ஊடகத்திற்கு எதிராக திருச்செந்தூரில் வீடுகளில் வாசலில் முருகர் படம் வைத்து விளக்கேற்றி வணங்கி கந்த சஷ்டி கவசம் பாடி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கந்த சஷ்டி கவம் குறித்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் வலைதள ஊடகத்தில் விமர்சித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்தனர். கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்ட்டுள்ளதால் வீடுகளிலிருந்து முருகனை வழிப்பட்டனர்.

இந்நிலையில் திருச்செந்தூரில் ஆடி மாதம் முதல் கார்த்திகை நாளான வீடுகளின் முன்பு முருகர் படம் வைத்து விளக்கேற்றி வணங்கியதோடு கந்த சஷ்டி கவசம் பாடினர். மேலும் முருகர் வேடமணிந்து குழந்தைகள் வந்தனர். திருச்செந்தூர் புளியடிதெரு, வ.உ.சி. தெரு, வீரராகவபுரம், தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவத்து கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க., மாநில மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here