சாத்தான்குளம் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி ரூ 8 லட்சத்து 25 ஆயிரம், இலவச வீட்டு மனை பட்டா, மாதம்தோறும் ரூ 5ஆயிரம்

0
129
sathai sirumi

சாத்தான்குளம் அருகே கல்விளையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் சிறுமி முத்தார் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்யவேண்டும், இறந்துபோன சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை எழுந்தது. கோரிக்கையை நிறைவேற்றினால்தான் அச்சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெறுவோம் என அக்குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்து போன சிறுமியின் தாயாருக்கு ரூபாய் 8 லட்சத்து 25 ஆயிரம் நிவாரண உதவியும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை அளிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து இறந்து போன சிறுமியின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் தாலுகா மெய்ஞானபுரம் அருகே இந்திரா நகரைச் சேர்ந்த சேகர் உச்சிமாகாளி தம்பதியின் மகள் முத்தார்,வயது 8. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் கல்லூரி அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் முத்தாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சார்ந்த முத்தீஸ்வரன் மற்றும் நந்தீஸ்வரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரண உதவிகள் வழங்கிய பின்னரே உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் இறந்து போன சிறுமியின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இறந்து போன சிறுமியின் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூபாய் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் ரூபாயும் 3 சென்ட் இலவச வீட்டு மனையும் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரிடம் நிவாரண தொகைக்கான காசோலையும் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.

இது தவிர இறந்து போன சிறுமியின் தாயாருக்கு அவரது ஆயுள் காலம் உள்ளவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான முதியோர் உதவித்தொகை மாதம் ரூபாய் 5000 மற்றும் பஞ்சப்படியுடன் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் இறந்து போன சிறுமி முத்தாரின் குடும்பத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தார் சிறுமியின் உடலை வாங்க ஒப்புக்கொண்டு தற்போது திருநெல்வேலி சென்றுள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி தெரிவித்ததாவது :-

’’தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையை சேர்ந்த சிறுமி கடந்த 15 ம் தேதி மதியம் மர்மாமன முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. 2 மணி நேரத்தில் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளியில் ஒரு நபர் கழுத்து நெரித்துகொலைவன்கூடு செய்ததாக ஒப்புகொண்டார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதற்கட்ட பரிசோதனையில் தகவல் இல்லை’’ என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here