கோவில்பட்டியில் ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு சார்பில் ஆர்ப்பாட்டம்

0
247
kovilpatti railway

லாபத்தில் இயங்கும் பயணிகள் விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து கோவில்பட்டி ரயில்வே நிலையம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

109 வழித்தடங்களில் லாபகரமாக இயங்கும் 151 பயணிகள் விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், சரக்குப் போக்குவரத்தையும், வருவாயையும் இருமடங்கு உயர்த்தப் போவதாக போலி காரணத்தைக் கூறி ரயில்வே சரக்கு போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 50 சதவீத காலியிடங்களை சரண்டர் செய்வதை கண்டித்தும், ‌ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் , ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கினைக் கைவிடக் கோரியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் ( எஸ்.ஆர். எம் .யு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த அமைப்பின் கிளைச் செயலாளர் மைக்கேல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். செண்பகராஜ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நிலைய அதிகாரி சுடலைமணி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here