புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், பசுவந்தனையில் வரும் 20-ம் தேதி முதல் 31 வரை மதியம் 2 மணிக்கு பிறகு கடைகளை மூட முடிவு

0
207
puthiyampudur

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் பல கட்டங்களில் பல்வேறு விதத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அரசு நிர்வாக நம்புகிறது.

அந்த வகையில் அதிகரித்து வரும் கிராம புறங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. ஏரல், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரமும் தற்போது ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் பசுவந்தனை ஆகிய இடங்களில்

கொரோனா கடுந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் திங்கள்கிழமை கிழமை 20ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வ ரை 12 நாட்கள் மதியம் 2 மணிக்கு பிறகு அனைத்து கடைகளை முடவும் ஓட்டல்கள் மட்டும் 3 மணி வரையில் செயல்படவும் அரசு அதிகாரிகள் முன்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here