ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது !

0
147
srivai news

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் மாடசாமி(வயது 40). விவசாயியான இவரது அண்ணன் சுப்பிரமணியனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மாடசாமி, தனது அண்ணன் மகளுடன் ஊரில் நடந்து சென்றபோது அங்குவந்த பலவேசம் என்பவரது மகன்கள் கிருஷ்ணன், சொக்கலிங்கம் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் வடிவேல் ஆகிய மூவரும் சேர்ந்து மாடசாமி மற்றும் அவரது அண்ணன் மகளை திடீரென்று தாக்கினர்.

இதில், படுகாயம் அடைந்த இருவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரில் இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் உத்தரவின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மூன்றுபேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here