தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமின் மனு தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவு.
இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்பட 10 பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை ஆகியோர் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதில் ஆய்வாளர் தரப்பு மனு வாபஸ் பெறப்பட்டது. பாலகிருஷ்ணன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது பால்துரை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.