காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 733 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்; உள்துறை அமைச்சகம் தகவல்

0
20
201906251800152095_Over-700-terrorists-killed-in-JK-in-last-three-years-Govt_SECVPF.gif

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 3 வருடங்களில் 700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2016ம் ஆண்டு 150 பயங்கரவாதிகளும், 2017ம் ஆண்டு 213 பயங்கரவாதிகளும், 2018ம் ஆண்டில் 257 பயங்கரவாதிகளும் மற்றும் இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் 16 வரை 113 பயங்கரவாதிகளும் என 733 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த கால கட்டத்தில் பொதுமக்களில் 112 பேரும் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் 2016ல் 15 பேரும், 2017ல் 40 பேரும், 2018ல் 39 பேரும் மற்றும் இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் 16 வரை 18 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here