நாசரேத் ஆலய கோபுரத்தில் குடும்பத்தோடு போராட்டம் நடத்தி வருபவரிடம் மாவட்ட எஸ்.பி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்

0
113
sp

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அகஸ்டின் என்பவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததால் நாசரேத் ஆலய கோபுரத்தின் மீதேறி குடும்பத்தினருடன் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதின் பேரில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கீழ் பல்வேறு கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் இந்த திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இதற்குட்பட்டு நாசரேத் தூய யோவான் பேராலயம் இருந்து வருகிறது.

நாசரேத் தூய யோவான் பேராலயம் அலுவலகத்தில் அகஸ்டின் 17 ஆண்டுகளாக அந்த சேகர அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரை சிஎஸ்ஐ தேவாலய பாதிரியார் பணியிடை நீக்கம் செய்தது இதையடுத்து மனம் உடைந்த அகஸ்டின் என்பவர் இன்று நாசரேத் பேராலய கோபுரத்தின் 180 அடி உயரம் மீது ஏறி அகஸ்டின் (40) மற்றும் அவரது மனைவி கிறிஸ்டி (38)மற்றும் இரண்டு மகன்கள் ஜாண்(10), கேமர்ர் (8) ஆகியோர்களுடன் கோபுரத்தின் உச்சியிலிருந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து விடுவதாக மி ரட்டல் விடுத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து டி.எஸ்.பி. நாகராஜன், ஆய்வாளர் சகாயசாந்தி, காவல்துறையினர் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர் மாரியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிஷப் நேரடியாக வந்து உத்தரவாதம் தந்தால்தான் இறங்குவேன் என பிடிவாதம் பிடித்துவருகிறார். ஆனால் பிஷ்ப்பிற்கு கொரோனா வந்திருக்கிறது அவரால் வரமுடியாது என்றும் சொல்ல்லி பார்த்தனர். ஆனாலும் அவர் இறங்க சம்மதிக்கவில்லை.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அந்த இடத்திற்கு வந்தார். முதலில் அவர் ஒலிபெருக்கி மூலம் பேசினார். பின்னர் செல்போன் மூலம் பேசினார். உன் கோரிக்கையை பிஷப்பிடம் நான் பேசுகிறேன். என்னை நம்பி கீழே இறங்கு என சொன்னார்.

அதற்கு அவர், ‘’அமெரிக்காவிலிருந்து பணி நீக்க ஆர்டர் போடுகிற இவர்கள், இப்போது இங்கே இருந்து அதை ரத்து செய்யும் ஆர்டர் போடமுடியாதா? ரத்து செய்யுற ஆர்டரை போடச் சொல்லுங்க நான் கீழே இறங்குகிறேன்’ என்று பதில் சொன்னார். தற்போது மாவட்ட எஸ்.பி திருமண்டல நிர்வாகத்திடம் பேசி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here