நாசரேத் பொறியியல் கல்லூரியில் டெங்குவிழிப்புணர்வுமுகாம்

0
253
nazareth

நாசரேத்,நவ.23:தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் டெங்கு விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. மெக்கானிக்கல் பிரிவு துறைத் தலைவர் எபனேசர் சாமுவேல்டேனியல் ஆரம்பஜெபம் செய்தார்.கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் ஞானசெல்வன் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர்முனைவர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இந்தமுகாமில் சாத்தான்குளம் அரசுமருத்துவமனை மருத்துவர் டாக்டர்ஆத்திகுமார் கலந்துகொண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் உடையார்குளம் சித்தா மருத்துவர் டாக்டர் ஸ்ரீதேவி நட்டாரம்மாள் மற்றும் குழுவினர் நிலவேம்பு கசாயம் 400 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டு நலப் பணிதிட்டக்குழு துணைஒருங்கிணைப்பாளர் ஜேஸ்மின்சொர்ணகிருபா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ரோசிரியை நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை தாளாளர் சசிகரன்,முதல்வர் ஜெயக் குமார் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசெல்வன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here