இணையதளம் வழியாக மாணவர்களுக்கு 25,26-ம் தேதிகளில் பல்வகை கலை பயிற்சி – தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு

0
242
thoothukudi news

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :-

’’கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிகப்பட்டு உள்ளதால் இணைய வழி வாயிலாக கல்வி சிறப்பு அம்சங்களை விளக்கும் விதமாகவும் பயனுள்ள கருத்துக்களை மாணவர்கள் மனதில் பதிக்கும் வகையிலும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் கல்வி சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சியானது மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி பயிற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தற்பொழுது மாணவர்களுக்கு நம்முடைய கலாச்சாரம் பண்பாடு கலை ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் சுவாரசியமாகவும் அறிந்து கொள்ளும் வகையில் இணைய வழியாக தோல் பாவை கூத்து கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களான திருவாளர்கள் பா.முத்துசந்திரன் மற்றும் அ.லட்சுமணராவ் ஆகியோரால் 25.07.2020 மற்றும் 26.07.2020 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட உள்ளது.

மேற்ன்படி இணையவழி பயிற்சிப் பட்டறையில் 10 முதல் 14 வயது வரையிலான பள்ளி குழந்தைகள் அனைவரும் zoom செயலி மூலமாக மீட்டிmeeting id 83190654451 Password 3GUhhD வழியாக இணைந்து பயன் பெறலாம்’’ என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here