கோவில்பட்டி புற்றுக்கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை

0
31
kvp news

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரிஅம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை கணபதி பூஜையுடன் தொடங்கி கும்பகலச பூஜை, ருத்ர ஜெபம், மழைவளம் வேண்டி வருண ஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலபைரவர்க்கு மஞ்சள், பால்,தேன், விபூதி,பன்னீர்,சந்தனம், போன்ற18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி நிரிவாகக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா.; ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், சீதாஎட்டப்பன், பிரேமாமுருகன், ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here