ஆக்கிரமிப்பில் உள்ள கயத்தாறு விமானநிலையத்தை கையகபடுத்தி ராணுவத்திடம் ஒப்படைப்போம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

0
263
kadambur raju

ஆக்கிரமிப்பில் இருக்கும் கயத்தாறு விமானநிலையத்தை கையகபடுத்தி ராணுவத்திடம் ஒப்படைப்போம் என்று கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘’கோவில்பட்டி அருகே கயத்தார் விமானநிலையம் தரமான விமான நிலையம், அதன் ஓடு தளம் இன்றும் தரமாக உள்ளது. 2ம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தில் உள்ள விமான படைக்கு ஒப்படைப்பதற்காக கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விமான படைபிரிவு விமானதளம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளில் திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது,

நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும் திரைப்படத்துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாட்டில் உள்ள நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here