நாசரேத் மார்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் !

0
52

நாசரேத்,ஜுன்.26: நாசரேத் மார்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதுகலை ஆசிரியர் முனைவர் செல்லப்பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.

தலைமையாசிரியர் ரெ. அல்பர்ட் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் யோகா நெறிமுறையை பின்பற்றி கூட்டு யோகா பயிற்சி செய்தனர். மாணவர்களிடையே கட்டுரை எழுதும் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here