”100 சதவீதம் முககவசம் அணிந்தால் தான் கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும்” -திருச்செந்தூரில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுரை

0
283
s.p news

திருச்செந்தூர், ஜூலை 22

100 சதவீதம் முககவசம் அணிந்தால் தான் கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெயகுமார் அறிவுரை வழங்கினார்.

திருச்செந்தூர் சப் டிவிஷன் போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி இரும்பு ஆர்ச் சந்திப்பில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி பேசியதாவது:

’’உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு இந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

100 சதவீதம் முககவசம் அணிந்தால் தான் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த நோய்யின் தாக்கத்தை குறைப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் தினமும் குடிக்க வேண்டும். அதே போல் இஞ்சி மிளகு, மஞ்சள், வேப்பிலை கலந்து காய்ச்சி குடிக்க வேண்டும். நாட்டு மருந்து குடித்தாலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வியாபாரிகள் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைத்தால் கொரோனாவின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபடலாம்’’ இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத், இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்தூர் தாலுகா முத்துராமன், கோயில் ஸ்டேஷன் ரஞ்சித்குமார், குலசேகரப்பட்டணம் ராதிகா, ஆறுமுகநேரி சாந்தி, தனிபிரிவு சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், ஓட்டல் மணிஅயயர் ரமணி, வியாபாரிகள் சார்பில் மனோகரன், பா.ம.க., தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடன்குடி அப்துல் கலாம் டீரிம் மீடியா சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி குறுபடம் ஒளிப்பரப்பானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here