பனிமய மாதா ஆலய திருவிழாவை காண யாரும் நேரில் வரவேண்டாம் -தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்

0
74
thoothukudi madha kovil

தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26-ஆம் தேதி மக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும். திருவிழாவை காண யாரும் நேரில் வரவேண்டாம். ஊடகங்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யபட இருக்கிறது என்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை பேட்டியின் மூலம் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆலய வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மறைமாவட்ட ஆயர்,’’438 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆலய விழாவில் தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் ஏராளமான அளவில் பங்கெடுத்து கொள்வார்கள். ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் பங்கெடுத்துக் கொள்ளும் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கோரானா தொற்றின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் வரும் 31ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் இந்த பேராலய திருவிழா மக்கள் பங்களிப்பு எதுவும் இன்றி எளிமையாக நடைபெறும் என தெரிவித்தார்.

வழக்கம் போல் வரும் 26ம் தேதி கொடியேற்றம் நடைபெறும் தொடர்ந்து வழக்கம்போல் தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். திருப்பலியில் கோரனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், பொருளாதாரம் வளரவும் ஜெபிக்கபடும்.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் உள்ளூர் தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவே மக்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், வரும் 26ம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரசித்திபெற்ற இந்த ஆலயம் குறித்து தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதனடிப்படையில் ஊடங்கு காலங்களில் என்னவெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்து கொடுத்து வருகிறோம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here