நாசரேத் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை – தூண்டியதாக 3பேர் மீது வழக்கு

0
207
nazareth sucid

நாசரேத், ஜூலை 23 நாசரேத் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்ய தூண்டியதாக போலீஸார் கணவன் மனைவி உள்ளிட்ட 3பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

நாசரேத் அருகே உள்ள மணிநகரைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி (38) . இவரது கணவர் கட்டிடத் தொழிலாளி இவர்களுக்கு 3மகன், 1மகள் உள்ளனர். செல்விக்கும், அவரது கணவரின் சகோதரர் சேர்மத்துரை மனைவி ராஜேஸ்வரிக்கும் வீட்டுக்கிடையே மதில் சுவர் கட்டுவது தொடர்பாக பிரச்னை உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செல்விக்கும், ராஜேஸ்வரிக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வி வீட்டில் இருந்து சானிபவுடர் விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். உடன் அவரை நாசரேத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து செல்வியின் கணவர் பெருமாள் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சூரியன் வழக்கு பதிவு செய்தாh;.நாசரேத் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹரிகிருஷ்ணன் விசாரணை நடத்தி செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக சேர்மத்துரை, அவரது மனைவி ராஜேஸ்வரி, உறவினர் முனியாண்டி ஆகியோர் மீது வழக்குபதிந்து வலைவீசி தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here