மேலச்சண்முகபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நிகழ்ச்சி தொடக்கம்!

0
23
WhatsApp Image 2019-06-26 at 12.47.47 PM

தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் இந்துநாடார் உறவினர் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நேற்று கால்நட்டு விழா தொடங்கி வரும் ஜுலை மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஓன்றரை லட்சம் மதிப்பீல் ரூபாய் நோட்டு மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் தினமும் கும்மிப்பாட்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாரதனைகள் நடைபெறும். வரும் 29ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜையும் 30ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை லட்சுமி பூஜை, பெருமாள் சுவாமிக்கு சுதர்சன ஹோமம், கனகாபிஷேக பூஜை, மதியம் சிறப்பு பூஜை, இரவு வில்சை, கும்பம் ஏற்றுதல், பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை, குருபூஜை பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

1.7.19 திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு புதிய துறைமுகம் தீர்த்தவாரி செல்லுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கரகத்துடன் வீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

ஜுலை 2ம் தேதி காலை கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு சிவந்தாகுளம் கன்னி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதிஉலா வந்து கோவிலை அடைகிறது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, அம்மனுக்கு சிறப்புபூஜை சுடலை மாடசாமிக்கு பாரிவேட்டை செல்லுதல் நடைபெகிறது.

ஜுலை 3ம் தேதி காலை 7 மணிக்கு பொங்கலிடுதல், கிடாய் நேமிசம் செலுத்துதல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 4.30 மணிக்கு புதிய துறைமுகத்தில் இருந்து முளைப்பாரி அலசுதல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here