தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் 5பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அலுவலகம் மூடப்பட்டது.
தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்க உதவி ஆணையர் உட்பட 5 அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும், சுங்க முகவர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் அலுவலகத்தில் அனுமதிக்காமல் கதவு பூட்டப்பட்டது. இதனால் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.